search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சித் திட்ட பணிகள்"

    • வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 50 மாணவர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்- மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் தோணுகால் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டு வரும் காலை உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.

    பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களின் வருகை பதிவு, கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்தும், சமையலறை கூடத்திற்கு சென்று உணவு சுகாதாரமாகவும், சுத்தமாகவும் சமைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

    மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், ஜோகில்பட்டி கிராமத்தில் பயன்பெறும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று இந்த திட்டத்தின் பயன்கள், மருத்துவர்களின் வருகை, சிகிச்சை முறை, மருந்துகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினர்.

    இரும்பு பெண்மணி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களின் இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்ய இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினர்.

    காரியாபட்டி ஊராட்சி சுரபி உண்டு, உறைவிடப் பள்ளியில் படிக்கும் நரிக்குறவர் சமுதாய மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாணவர்கள் மின்னணு தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பதை ஊக்கப்படுத்தும் வகையில், அந்த பள்ளிக்கு மின்னணு தொலைக்காட்சியை வழங்கினார்கள்.

    மேலும் 50 மாணவர்க ளுக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    பின்னர், வளையங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரதமரின் சிறு, குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம்- 35 சதவீதம் மானியத்தில் பெறப்பட்ட கடனுதவி மூலம் செயல்பட்டு வரும் மோனா சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில், சிறுதானிய மற்றும் கேக் வகைகள் தயாரிக்கும் முறைகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    • ஏரிக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டார்.
    • அணையினையும் நீர் வரத்தினையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என கலெக்டர் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கம்பைநல்லூர் பேரூராட்சியில் பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.202.28 லட்சம் மதிப்பீட்டில் 17 வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.115.50 லட்சம் மதிப்பீட்டில் 55 வீடுகள் கட்டும் பணிகள் உள்ளிட்ட மொத்தம் ரூ.317.78 லட்சம் (ரூ.3.18 கோடி) மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நகர்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கம்பைநல்லூர் வார்டு எண் 1-ல் செல்லியம்மன் கோயில் அருகில் உள்ள கால்வாயினை தூர்வாரி, கரைகளை செம்மைபடுத்துதல் மற்றும் ஏரிக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதையும்,

    வார்டு எண் 5-க்குட்பட்ட தங்கவேல் நகர் மற்றும் ஜெ.ஜெ நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்புத்திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கங்கிரிட் வடிகால் அமைக்கும் பணி மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதை தொடர்ந்து மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஈச்சம்பாடியில் அமைந்துள்ள ஈச்சம்பாடி ஆணைக்கட்டினை நேரில் பார்வையிட்டு நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவற்றை கேட்டறித்தார்.

    அணையினையும் நீர் வரத்தினையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என கலெக்டர் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது பேரூராட்சிகள் துறை உதவி இயக்கநர் குருராஜான், கம்பைநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகதீசன், நீர்வளத்துறை உதவி செயற் பெறியாளர் ஆறுமுகம், கம்பைநல்லூர் பேரூராட்சி தலைவர் வடமலை முருகன், துணைத் தலைவர் மதியழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×